ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரொஷான் ரணசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அந்த அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர்
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக ரொஷான் ரணசிங்கவை நியமிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
