துவாரகா காணொளியின் பின்னணியில் இந்தியா: சமூக செயற்பாட்டாளர் ஆரூடம்(Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள காணொளியின் பின்னணியில் இந்தியாவின் தலையீடு காணப்படலாம் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவகாந்த் தெரிவித்தார்.
கடந்த 27 ஆம் திகதி உலகவால் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தன்று துவாரகாவின் உரை என வெளியாகிய காணொளி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குடும்ப அரசியலை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.
அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்தவர். யுத்தத்தில் உயிரிழந்த பல்வேறு குடும்பங்களை போல விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இது மாபெரும் தியாகம்.
எனினும் துவாரகா உயிருடன் இருந்தால் மகிழ்வான விடயமாக கருதப்படும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளி போலி என்பதாகவே காணப்படுகிறது.
இது அரசியல் இலாபம் ஈட்டும் செயற்பாடாக வெளிப்படுகிறது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |