சொந்த பணத்தில் திருப்பதி சென்ற பிரதமர்:ஊடக செயலாளர் தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa)இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதிக்கு சென்று ஏழுமலை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பிரதமருடன் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa), இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச (Rohitha Rajapkasa) அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக திருப்பதி ஆலயத்தில் விசேட ஆசிர்வாத பூசைகள் நடத்தப்பட்டதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட (Rohan Weliwita) தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் தனது குடும்பத்துடன் சென்றிருந்த இந்த தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்கத்தின் பணத்தை செலவிடவில்லை எனவும் அனைத்து செலவுகளும் பிரதமரின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டன எனவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.