மட்டக்களப்பிற்கு வருகை தரும் பிரதமர்! பாரிய போராட்டத்திற்கு தயாராகும் விவசாய கமக்கார அமைப்புகள்
மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இன்றைய தினம் (04.08.2023) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் விவசாய சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அல்லது பிரதேச செயலகத்தின் அலுவலக மட்டத்தில் உள்ளவர்களுக்காக இந்த கூட்டம் இடம்பெறுகிறதா? இது தொடர்பான விளக்கத்தினை தமக்கு கச்சேரி மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாய கமக்கார அமைப்புகள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பேச வேண்டுமாக இருந்தால் உண்மையிலேயே விவசாய கமக்கார அமைப்புகளுடன் தான் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், பிரதமரின் வருகை எதற்காக என்ன நோக்கத்திற்காக என்பது தெரியாத காரணத்தினால் கமக்கார அமைப்புகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து வருகின்ற அராஜகங்கள், அத்துமீறிய காணிக்கொள்ளைகள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், திட்டமிட்ட தொல்பொருள் எனும் போர்வையில் கண்ட இடமெல்லாம் புத்தபகவானுக்கு சிலை வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதுபோன்ற விடயங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் பிரதமருடன் பேச வேண்டும். பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற போதிலும் குறித்த அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் இன்றைய தினம் புறக்கணிக்கப்பட்ட சமூகமான விவசாயக் கமக்கார அமைப்புகள் மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புபவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாகவும் அறிய முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
