மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த திருத்தச்சட்டம் விரைவாக கொண்டு வரப்படும் - பிரதமர்
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான தேர்தல் சட்டத் திருத்தத்தை துரிதமாக மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வரும் விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போது பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டே மாகாணசபைத் தேர்தலின் அவசியம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
நாட்டு மக்களுக்கு மாகாணசபைத் தேர்தல் ஒன்று அவசியம் என்பதை காணக்கூடியதாக இல்லை.
இலங்கையில் தற்போது காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை இதற்கு காரணமாக இருக்கலாம்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு தேர்தலை எதிர்கொள்ளும் இயலுமை இருக்கின்றது. மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை பழுதுப்படவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் இந்தியா அரசு இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்த இலங்கை அரசாங்கம் முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
