புத்தாண்டில் பிரதமர் விடுத்துள்ள அழைப்பு
"ஒரு வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை" நோக்கி நாடு ஒன்றிணைந்து முன்னேறிச் செல்லும்போது, அனைத்து இலங்கையர்களும் புத்தாண்டில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
ஒற்றுமையுடனும் தாராள மனப்பான்மையுடனும் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு புத்தாண்டு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய அத்தியாயம் தொடங்கும் தருணத்தில்...
இந்த பாரம்பரிய விழா, நமது கலாசாரம் மற்றும் மதிப்புகளில் ஆழமாக வேரூன்றிய மாற்றத்தைக் கொண்டு வரவும், ஒற்றுமையுடன் முன்னேறவும் நினைவூட்டுகிறது.
வரவிருக்கும் மாதங்களை எதிர்நோக்கி, பகிரப்பட்ட அபிலாஷைகள் மற்றும் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு குடிமகனும் சமூகத்தில் மரியாதை, அமைதி மற்றும் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
