அரசாங்கம் இந்த அரசியலில் இருந்து விலகி சென்றால் இதுவே நடக்கும்: பிரதமர் மஹிந்த எச்சரிக்கை
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக, ஒரு நோக்கத்திற்காக போராட்டங்களை நடத்திய அனைத்து கட்சிகளும் ஒரு கொடியின் கீழ் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும், இந்த ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறுப்பு எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சில கட்சிகள் சிறிய கட்சிகளாக இருக்கலாம், ஆனால், அரசியலில் முக்கியமானது சிறியது, பெரியது அல்ல, நோக்கமே முக்கியமானது. அவர்கள் எவரும் எமது துணையோ, ஊன்றுகோல்களோ, கைப்பாவைகளோ அல்ல.
அவர்கள் எம்முடன் இணைந்து ஒரு நோக்கத்திற்காக பயணிப்போர். ஐக்கியத்தை கை கூப்பி அழைப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கிடைத்த பாரம்பரியம்.
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது. அரச அதிகாரம், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் இவற்றில் செய்ய முடியாதவைகள் பல இருக்கின்றன.
ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான பிரச்சினை முற்றியமைக்கும், விவசாயிகளில் ஆர்ப்பாட்டங்கள் இந்தளவுக்கு பாரதூரமாக நீண்டு சென்றுள்ளமைக்கும் அவர்கள் மத்தியில் வேலைகளை செய்யாததே காரணம்.
அரசாங்கம் மக்களின் குரலை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்த அரசியலில் இருந்து விலகி சென்றால், தோற்கடிக்கப்பட்ட சக்திகள் குறுகிய இலாபங்களை பெறுவதற்காக மக்கள் மத்தியில் புகுந்து பாரிய சிக்கலை உருவாக்குவார்கள் என எச்சரித்துள்ளார்.
வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் சிரமமான, கஷ்டமான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.
இப்படியான காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுக்கும் மக்கள் அரசாங்கத்தின் மீதே குறை கூறுவார்கள்.
மக்கள் திட்டினாலும் பொம்மைகளை எரித்தாலும் அவர்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri