மகிந்தவின் மகன் ரோஹித குறித்து புதுத் தகவல் கூறும் ஹரினி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித ராஜபக்சவினால் எமது வான்பரப்பில் விடப்பட்ட சுப்ரீம் செட் செயற்கைக்கோளில் இலங்கை அரசாங்கம் முதலீடு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த நிறுவனத்தினால் இலங்கைக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுப்ரீம் செட் செயற்கைக்கோள்
சுப்ரீம் செட் நிறுவனம் மே 23, 2012 அன்று இலங்கை முதலீட்டு சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இந்த நிறுவனம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளுக்காக 1 கோடியே 21 இலட்சத்து நான்காயிரத்து 936 ரூபா முதலீடு செய்துள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் உள்நாட்டு சந்தையை மையமாகக் கொண்ட திட்டமாக இது முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி தொழில்நுட்ப பூங்காவில் ஒரு செயற்கைக்கோள் அமைப்பை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் சுப்ரீம் செட் பிரைவேட் லிமிடெட் கடந்த 23.05.2012 அன்று இலங்கை முதலீட்டு சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது,
இதன் முதலீட்டு தொகை 1,828 மில்லியன் ரூபாவாகும். மேலும் இந்த திட்டம் பங்குதாரர்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு வசதிகளை வழங்குவதாகும். இந்த திட்டம் 27.08.2015 முதல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வருமானம் பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதினேழு மில்லியன் ரூபாய். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வருமானம் இருபத்தெட்டாயிரத்து நூற்று முப்பத்து மூன்று மில்லியன் ரூபாய்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வருமானம் இருபத்தொன்பதாயிரத்து நூற்று ஆறு. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வருமானம் முப்பத்து நான்காயிரத்து நூற்று அறுபத்தொன்பது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நாற்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்து. 2021, 2022 எண்பத்தேழாயிரத்து எழுநூற்று எண்பத்தொன்பது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இது முப்பத்தொன்பதாயிரத்து ஐநூறு வரை பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
