அநுர அரசாங்கத்திற்கு எதிராக 25 வழக்குகள்! செலவிடப்படும் பெருந்தொகை பணம்
அரசாங்கத்திற்கு எதிராக 25 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்தொகை பணம் செலவு..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
76 வருடங்களாக எங்களை கல்வர்கள் என்று சொன்னார்கள். அரசாங்கத்திற்கு இப்போது எட்டு மாதங்கள் தான். இப்போது தான் அமைச்சர்களாகியுள்ளனர். நாட்கள் செல்ல ஆசைகள் உருவாகலாம். அப்போது, பார்ப்போம். ஆசைகள் யாருக்கு இல்லை. எல்லோருக்கும் இருக்கிறது. எங்கள் காதுகளுக்கும் கேட்கிறது.
பொலிஸ் திணைக்களத்திற்கு 100 பேரை இணைத்துக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையில் அவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.
புதிய வர்த்தமானி வெளியிடுவதாக கூறுகின்றனர். இதற்கு பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது. இவை யாரின் பணம். பொலிஸ் துறையில் பணியாட்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
ஆனால் இந்த 100 பேரை இன்னும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் பாதுகாப்பு அணியில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் எவரையும் மாற்றவில்லை. அனைவரும் இருக்கிறார்கள்.
அதேபோல் பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள 700 பேரும் உள்ளனர். இவர்கள் மக்களுக்கு பொய் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அனைத்து தகவல்களையும் வைத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குரங்குகள் மற்றும் மயில்கள் கணக்கெடுப்பில் பல மில்லியன் ரூபாக்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு யார் பதில் சொல்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



