நான் உங்களை எச்சரிக்கின்றேன்! பிரதமர் ரணில் ஆவேசம்
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது எனவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு இந்தியா மட்டுமே உதவுவதாகவும் இவற்றை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு வேறு எந்த நாடும் உதவவில்லை எனவும் பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணிலின் எச்சரிக்கை
எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. உணவு, மருந்து, உரம் வாங்க உதவுவார்கள். எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது.
தற்போது இந்திய கடன் வரம்பு மீறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியை நீட்டிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களிம் நான் கூறுகின்றேன், நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் ஒரு பணிப்புறக்கணிப்புக்கு சென்றால், உதவிக்காக இந்தியாவுக்குச் செல்லும்படி என்னைக் கேட்க வேண்டாம்.
முன்மொழியப்பட்ட சட்டமூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கோரப்படாத முன்மொழிவுகளை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை வழங்குவதற்காக இந்த சட்டமூலத்தை நாங்கள் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.




