பொருளாதார நெருக்கடிக்கு புதிய தீர்வை தேடிய பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று(30) தங்களது விஜயத்தை முடித்துக்கொள்ள உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம்
பத்து பேரைக் கொண்ட சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் இந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தீர்வு
சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கபூர்வமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரே தீர்வு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான மூன்று வாரங்களில் பயணிக்கும் இலங்கை! விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
