வெசாக் பௌர்ணமி தினத்தின் 210ஆவது அமாதம் சிசிலச நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

Covid-19 Mahinda rajapaksa Vesak
By Independent Writer May 26, 2021 03:30 PM GMT
Report

அனைத்து பௌர்ணமி தினங்களிலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கமைய நடாத்தப்பட்டு வரும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 210 ஆவது நிகழ்வு வெசாக் பௌர்ணமி தினமான இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

முதலில் பிரதமர் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்டோர் அலரி மாளிகை வளாகத்தில் உள்ள புத்த பெருமானின் உருவச் சிலைக்கு மலர் வைத்து மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தர்ம போதனைகளுக்காக வருகை தந்த அமரபுர ஸ்ரீ சுமன விகாரை தரப்பின் பன்னிபிடி தெவ்ரம் வேஹர ஸ்தாபகர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொலன்னாவே ஸ்ரீ சுமங்கல மஹாநாயக்கரை மத கலாச்சார மரியாதைகளுடன் வரவேற்றார்.

ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த அமாதம் சிசிலச தர்ம போதனை நிகழ்வு இடம் பெறுகின்றன. அந்நிகழ்வின் 210 ஆவது உபதேசமானது வெசாக் பௌர்ணமி தினத்தன்று இடம்பெற்றுள்ளது. வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் வகையில் தர்ம போதனை இடம்பெற்றுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தில் 2565 வருட கால பின்னணியைக் கொண்ட பௌத்த மத கோட்பாட்டையும், புத்த பெருமானின் மத போதனைகளையும் உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரபுர ஸ்ரீ சுமன விகாரை தரப்பின் மகாநாயக்கர் பன்னிபிடிய ஸ்ரீ தெவ்ரம் வெஹர ஸ்தாபகர் போராசிரியர் கொலன்னாவே ஸ்ரீ சுமங்கல தேரர் பின்வருமாறு உபதேசம் செய்தார்.

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே, 30 வருட கால யுத்த சூழலும், அதன் விளைவுகளும் உங்களுக்கு நினைவில் இருக்கும். யுத்த கொடுமைகளைக் குளிர் அறையில் இருந்து நீங்கள் காணவில்லை, காணொளிகள் ஊடாகவும் பார்வையிடவில்லை. மக்களின் உயிர் பறிபோயுள்ளது என்பதை அறிந்தவுடன், அவ்விடம் விரைந்து சென்றீர்கள்.

கொழும்பு புறக்கோட்டையில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது மனித உடல்கள் சிதறிக்கிடந்தன அவ்வேளை நீங்கள் அங்கு சென்றீர்கள். கெபிடிகொல்லாவ பிரதேசத்தில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

இறந்தவர்களின் உடல்களின் மீது அவர்களின் உறவுகள் வீழ்ந்து அழுதனர். அப்போதும் நீங்கள் அவ்விடம் சென்றீர்கள். அன்று நீங்கள் எதை கண்டீர்கள். நாற்றிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள யுத்தத்தை எவ்வாறு நிறைவுக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றி யோசித்தீர்கள்.

இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடவுளே கர்ப்பிணி தாய்மார்களைக் கூட வெட்டிக் கொன்றதைப் பார்க்கும் போது, குழந்தைத் தனமான சிறு பிக்குகளையும் துண்டு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தமையினை நீங்கள் மனதளவில் உணர்ந்தீர்கள்.

அந்த வேதனை இன்றும் உங்களின் நினைவில் இருக்கும். அந்த வேதனை , உணர்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டீர்கள். இப்பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்றீர்கள். நான் இறப்பதற்கு முன்னர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என மனதளவில் உறுதி கொண்டீர்கள்.

யுத்தத்துடன் வாழ்ந்த இராணுவத்தினருக்கு நீங்கள் மீண்டும் உயிர் வாழும் வாய்ப்பு கொடுத்தீர்கள். அனைவருக்கும் தைரியமளித்தீர்கள் என்று ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நன்மைக்காகப் பிறக்கும் தலைவர்கள் உலகில் மிகக் குறைவு. வாழ்நாள் முழுவதும் புண்ணியம் பெறும் மனிதர்கள் பிறப்பதும் அரிது, ஆனால் மறைமுகமான பெரும் புண்ணியம் உங்கள் வசம் உள்ளது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வைராக்கியம், பொறாமை, குரோதம் ஆகியவற்றை நீக்கி வாழ்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய தேரர், தற்போதைய கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் தனது பிள்ளைக்கு மலரஞ்சலி செலுத்தக் கூட முடியாத நிலைமை காணப்படுகிறது. உலக மாயையின் காரணமாகவே இந்நிலைமை தோற்றம் பெற்றுள்ளது எனவும் தேரர் போதனை வழங்கியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்ற அமாதம் சிசிலச' 210 தர்ம பதேச நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US