துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் - பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான உத்தரவானது சுங்கத்திணைக்கள பணிப்பாளர் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு விடுவிக்கப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை துரித கதியில் சதொச மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் பெருந்தொகையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan