கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு, இன்றையதினம்(10.05.2025) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலையிலும் தனியார் வகுப்பிலும் நடந்த சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட குழு
அத்துடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் உரிய முறையில் நடைபெற்றதா என்பது குறித்து கல்வி அமைச்சினால் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அதனை நெறிப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள குழந்தைகள் நல மருத்துவர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் பிரதமர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டாஞ்சேனை மாணவியின் காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வந்தது! சிவானந்த ராஜா வெளியிட்டுள்ள தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri