அரச ஊழியர்களுக்காக புதிய சட்டவரைவு - பிரதமர் ஆலோசனை

Government Employees Prime Minister Mahinda Rajapaksha
By Mayuri Jul 14, 2021 10:35 AM GMT
Report

அரச மற்றும் அரை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தொடர்புடைய சட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டு அப்பரிந்துரைகளை ஒரு மாதக் காலப்பகுதிக்குள் வழங்குமாறு பிரதமர் பணித்தார்.

இதன்போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு நிவாரணமளிப்பதன் நோக்கம் குறித்து பிரதமரின் செயலாளர் காமினி செனரத் விளக்கமளித்தார்.

2019 நவம்பர் 27 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட வரைஞர் தில்ருக்ஷி சமரவீர மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன ஆகியோர் இதன்போது தெளிவுபடுத்தினர்.

அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால் நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட வரைவொன்று அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதன்போது தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச ஊழியர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே விளக்கமளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கனேஷ் தர்மவர்தன, மேலதிக செயலாளர் (சட்டம்) சந்திரா ஜயதிலக, ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஹரிகுப்த ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US