சகல சவால்களையும் முறியடித்தே தீருவோம் - அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் மஹிந்த
எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே பிரதமர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கோவிட் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் எனப் பல சவால்கள் எம்மைச் சூழ்ந்துள்ளன.
அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் நாட்டின் கோவிட் தொற்று நிலைமை மற்றும் கோவிட் தடுப்பு
நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்குப் பிரதமர் விளக்கியுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
