சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகலாம் - பிரதமர் அறிவிப்பு
அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கம் இருந்தால், எந்த நேரத்திலும் அவர்கள் அந்த தீர்மானத்தை எடுக்க முடியும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் தேவை இருந்தால், அவர்களை பலவந்தமாக வைத்திருக்கும் எந்த தேவையும் தமக்கில்லை எனவும், யார் அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் கவிழாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி விடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.
எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.
உலக சந்தையின் தற்போதைய நிலைமைக்கு அமைய பல நாடுகளில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிலைமையை எமது நாடும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இப்படியான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்குமாயின் இலங்கையின் நிலைமையானது இதனை விட மிக மோசமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
