சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் விளக்கேற்றினார்
17 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார்.
பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்சவும் பிரதமருடன் இணைந்து விளக்கேற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.
முற்பகல் 9.25 மணிமுதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து விளக்கேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் “தேசியப் பாதுகாப்பு தினம்” இன்றைய தினத்தில் அனுட்டிக்கப்படுகிறது.
பதினான்கு மாவட்டங்களைப் பாதித்து சுனாமி அனர்த்தத்தில் 31,229 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4100 பேர் காணாமல் போயினர்.
இவ்வனர்த்தத்தில் 516,150 பேர் இடம்பெயர்ந்ததுடன், சுமார் 250,000 பேரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்தன.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர், பிரதமரின் பாரியார் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
