மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி
மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனின் பூதவுடலுக்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (26) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர், அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து அரசியலுக்கு வந்த குணரத்ன வீரகோன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்முறையாக கரந்தெனிய பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணித்த குணரத்ன வீரகோன் தென் மாகாண சபையின் உறுப்பினராகவும், பின்னர் காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றிலிருந்து தெரிவாகி அமைச்சரவை அமைச்சராகவும் சேவையாற்றினார்.
இரு பிள்ளைகளின் தந்தையான குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில்
உயிரிழந்தார்.



