விழிப்புணர்வுடன் கூட்டுச் செயல்பாடும் அவசியம்..! பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்
இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச் செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்" உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலநிலை நிதி உதவி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறைப் புத்தாக்கம், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் ஊட்டச்சத்துக்கான சம வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய உணவு முறைமையை உருவாக்க வேண்டும்.

மேலும் அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து பயணிக்கக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப அணுகலை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.