மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் தெரிவிப்பு
தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(01) இடம்பெற்றது.
இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர் தேவைகளை பூர்த்தி செய்ய
தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகன கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்கும் பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை
இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திர வசதிகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.