கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்! பொலிஸார் விசாரணை
புதிய இணைப்பு
கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திலிருந்து 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நேற்று மதியம் நிறுவனத்திற்குள் புகுந்த நான்கு பேர் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களைக் கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவியில் பதிவான காட்சி
முகத்தை மூடியிருந்த சந்தேகநபர்கள், வெள்ளை நிற காரில் கொள்ளையடித்த பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளில் பதிவான படி, சந்தேகநபர்கள் முதலில் ஒரு ஊழியரை தாக்கிவிட்டு, பின்னர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் சுமார் 6 கோடி ரூபாய் பணத்தையும், உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்க நெக்லஸ்கள் மற்றும் 3 தங்க மோதிரங்களையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில் சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO..