முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு
இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார்.
பல குற்றச்சாட்டுகள்
எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.