அழிவுகரமான கருத்துக்களை வெளியிடும் நபர்கள்! பிரதமர் வெளியிடும் தகவல்
சில நிமிடங்களில் அழிவை ஏற்படுத்த முடியும் என்றாலும், அதைச் சரிசெய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். சில நேரங்களில் அந்த நேரத்தை முன்னறிவிக்க முடியாது. மக்கள் முன் வெறுப்பை பரப்பி, அழிவுகரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என பிரமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனநாயக நற்பண்புகளுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும், பொதுக் கருத்தின் மீது நம்பிக்கையைப் பேணவும், வெற்றி அல்லது தோல்வியைக் கொண்டு வரக்கூடிய இலக்குகளை நோக்கி நகரவும் நாம் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களில் சிலர் அரசியல் அதிகாரத்தை கையாண்டு கடைகள், வீடுகள், வாகனங்களை தீயிட்டு அழித்துள்ளனர்.
தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டிய நிலை
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமம் வெற்றியடையக்கூடிய எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு பொருத்தமான வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 70 வீதமாக இருந்த பொதுப் பிரதிநிதிகளின் விகிதத்தை, முதன்முறையாக 60 வீதமாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் இருந்து 30 வீதமாகவும், பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது.
இதனால், உள்ளூராட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு குழுக்கள் இந்த திரிபுபடுத்தலின் விளைவாக மக்கள் பிரதிநிதிகளாக மாற முயற்சிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.