பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து குழந்தை மருத்துவ நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன், பல கட்டங்களில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது அவசியம் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதன்போது கருத்துரைக்கையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் , 11 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிக முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த இயக்கத்தை வெற்றிகரமாகச் செய்ய 279,000 ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா
ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதும்
முக்கியம் என்று பெரேரா கூறியுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan