கோவிட் கட்டுப்பாட்டில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் ஐ.நாவிற்கு அறிவிப்பு
கோவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் மரண வீதம் மிகவும் குறைவானது எனவும், குணமடையும் வீதம் உயர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த் தொற்றாளர்களை அடையாளம் காணுதல் சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் நாடு முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த ஒரு லட்சம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் 77ம் அமர்வுகளில் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.