யாழில் நாக பாம்பு தீண்டி ஒருவர் மரணம்
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என தெரியவந்துள்ளது.
பாம்பு தீண்டி மரணம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார்.
இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்த போது அவரை பாம்பு தீண்டியுள்ளது.
சிகிச்சை பலனின்றி..
இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் 1ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
