மின்சாரம் - எரிபொருள் செலவினத்திற்கேற்ற விலை நிர்ணயம்.. ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றுக்கு செலவினத்திற்கேற்ற விலை நிர்ணயத்தை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்நிதியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளை நிறைவு செய்து அங்கீகரிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு மே 27 அன்று நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை அங்கீகரிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த மே 13 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார சீர்திருத்தம்..
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஒரு முன்நிபந்தனையாக உள்ள, மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றுக்கு செலவினத்திற்கேற்ற விலை நிர்ணயத்தை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் மானியங்கள் உள்ளிட்ட பிற நிவாரண நடவடிக்கைகள் 100 பில்லியன் ரூபா வரம்பிற்கு உட்பட்டவை என்றும், அது செப்டம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல்முறையைத் தொடர அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வருவாய் அடிப்படையிலான நிதி நிலைத்தன்மையை அடைதல், வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை செயல்படுத்துதல், நிதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் செலவினத்திற்கேற்ற எரிசக்தி விலை நிர்ணயம், பொதுக் கடன் நிலைத்தன்மை, விலை நிலைத்தன்மையைப் பேணுதல், அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மையுடன் அந்நிய செலாவணிக் கையிருப்பை உருவாக்குதல், நிதித்துறை நிலைத்தன்மை மற்றும் ஊழல் அபாயங்களைத் தடுப்பதற்கான உயர் மட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள், மற்றும் இலங்கையின் வளர்ச்சி ஆற்றலை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் நோக்கங்களாகும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan