மேலும் சில பொருட்களின் விலை அதிகரிக்கலாம்?
சீனி, உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியனவற்றின் விலைகள் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளைச் சீனி 130 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 150 முதல் 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் சில்லறை விலை 200 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
உள்நாட்டு வெங்காய உற்பத்திகள் சந்தைக்கு கிடைக்கப்பெறும் காலம் என்பதனால் இந்த மாதங்களில் வெங்காயத்தின் விலை உயர்வாகக் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு உருளைக் கிழங்கின் சில்லறை விலை 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகவும்,இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் விலை 160 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri