இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர் மற்றும் பிற அந்நிய செலாவணி விகிதங்களின் மதிப்பு உயர்வால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (03.05.2026) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், டொலரின் மதிப்பு உயர்வுடன், சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் அதிகரிப்பதாலும், சுஸுகி வேகன்ஆர் காரின் விலை ஒன்றரை லட்சம் ரூபாயும், ஹோண்டா சிவிக் காரின் விலை மூன்று லட்சம் ரூபாயும், டொயோட்டா டகோமா காரின் விலை இரண்டரை லட்சம் ரூபாயும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்வால் சந்தையில் வாகனங்களுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam