மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வெதுப்பக தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கும்
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் கட்டாயம் பாண் உட்பட வெதுப்பக தயாரிப்புகளின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வெதுப்பகங்களின் மின் கட்டணங்கள் ஏற்கனவே இருந்த விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், அதனை வெதுப்பக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே வெதுப்பக தொழிலுக்கு தேவையான கோதுமை மா, முட்டை உட்பட ஏனைய மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
எரிபொருள், மின் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பக தொழில் பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலைமையில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பாண் உட்பட வெதுப்பக தயாரிப்புகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும். அப்படி நடந்தால், வெதுப்பக தொழில் மேலும் பாதிப்புக்கு உள்ளாக காரணமாக அமையும் எனவும் ஜயவர்தன கூறியுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
