இலங்கையில் தொடரும் நெருக்கடி! 500 ரூபா வரை அதிகரிக்கவுள்ள அரிசியின் விலை
எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலையை 500 ரூபாவாக அதிகரிக்க முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலைகளின் உரிமையாளர்கள் ஏற்கனவே அரிசி விற்பனையை சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளமையினால் இந்த நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சமீப நாட்களாக அரிசி கையிருப்பில் இல்லை எனவும்,கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பல முக்கிய நகரங்களில் உள்ள அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
உள்ளூர் அரிசியின் விலை ஏற்கனவே 250 ரூபாவாக உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் 300 ரூபாயாக உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சுற்றிவளைப்புக்களுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராத தொகையினை அறவிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.