700 ரூபாவுக்கும் மேல் அதிகரித்த அன்னாசிப்பழத்தின் விலை
தட்டுப்பாடு காரணமாக இதுவரை 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு அன்னாசிப்பழத்தை தற்போது 700 ரூபாவுக்கும் மேலான விலையில் விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றாக நிறுத்தப்பட்டுள்ள அன்னாசி ஏற்றுமதி
அண்மைய நாட்களில் ஒரு கிலோ அன்னாசிப்பழம் 250 ரூபா முதல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அன்னாசிப்பழத்திற்கான தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு என்பன காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி வந்த அன்னாசிப்பழ ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய நாடுகள் சிலவற்றுக்கு அன்னாசிப்பழத்தை ஏற்றுமதி செய்து வந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அறுவடை குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது
அன்னாசிப்பழங்களை பயிரிடுவதற்காக பயன்படுத்தப்படும் உரம் மற்றும் எண்ணெய் வகை என்பன இல்லாத காரணத்தினால், அறுவடை குறைந்துள்ளது. இதுவே விலை அதிகரிப்பு பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.