நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு! நாளை முதல் புதிய விலை
50 கிலோகிராம் எம்ஓபி உர மூட்டை ஒன்றின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14.07.2023) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பு
மேலும் கூறுகையில், தற்போது கமநல சேவை நிலையங்கள் மூலம் 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் எம்ஓபி உர மூட்டையின் விலையானது நாளை (15) முதல் 14,000 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

எனவே நாளை முதல் புதிய விலையில் கமநல சேவை நிலையங்களில் இருந்து எம்ஓபி உரத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.22,000க்கு மேல் இருந்த எம்ஓபி உரத்தின் விலை ரூ.19,500ஆக குறைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உரத்தின் விலையை மேலும் 4,500 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri