முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும்! வெளியான எச்சரிக்கை
வீழ்ச்சியடைந்து வரும் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான விலை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
