சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு
இலங்கையில் 50 கிலோகிராம் நிறையுள்ள சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(08.11.2026) வெளியிடப்பட்டுள்ளது.
சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
இந்த விலை திருத்தம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்றும், இந்த விலை உயர்வு கட்டுமானச் செலவுகளை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீடுகளைக் கட்டும் தனிநபர்களையும், கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களையும் பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது தொடர்பில் கவலைகளுக்கு மத்தியிலேயே, இந்த புதிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழில் பொதுமக்களை வழிமறித்து பணம் பறிக்கும் மர்ம நபர் - பொலிஸாரின் அசமந்த போக்கால் தொடரும் அட்டூழியம்