அனைத்து பொருட்களின் விலையும் மீண்டும் அதிகரிக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
எதிர்காலத்தில் அனைத்து பொருட்களின் விலைகளும் மீண்டும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் (M.H.A.Haleem) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் மலிவானவை. ஆனால் தற்போது விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன.
முன்னாள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலையையே முதலில் குறைத்தது.
அப்போதைய அரசாங்கம் அரசத்துறை சம்பளத்தை அதிகரித்தது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், சலுகைகளை வழங்குவதற்கும் பணியாற்றியது.
எனினும் தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பெறுமதிசேர் வரிச் சலுகையை வழங்கியது.
இது வர்த்தகர்களுக்கு மாத்திரமே பயனளிக்கிறது, பொது மக்களுக்கு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri