ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமநாயக்க பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வி துஷ் விக்ரமநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவின் அதிகாரபூர்வ வாகனத்தில் அவரது மனைவி பயணம் செய்த போது வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற போது ஜனாதிபதியின் செயலாளரது மனைவியே வாகனத்தில் இருந்தார் எனவும், செயலாளரது சாரதியே வாகனத்தை செலுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வ வாகனத்தை சொந்த தேவைக்காக பயன்படுத்தியமையின் காரணமாக ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் வசித்து வரும் ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரியவும் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மாண்பு மிக்க நாடொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலகியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
