நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.
தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், உங்களின் ஆதரவினால் நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடி
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள் என கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய போது எனது திட்டத்தை நம்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
என்னுடன் இணைந்து கொண்டு நீங்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு நன்றி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தருணத்தில் தம்முடன் இணைந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
தமது பயணத்தில் இடையில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக கூறியுள்ளார்.

எதிர்கால அர்ப்பணிப்பு
இதுவரையில் இணைந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது பயணத்தில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக உங்களது அர்ப்பணிப்பு மற்றும் சரியான தீர்மானம் எடுப்பதற்கான உங்களது தைரியத்திற்காக நான் இறுதியாக நன்றி பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சி தங்களது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த விசேட முகநூல் பதிவினை இட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri