ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறக் கூடாது : சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை மீறக் கூடாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்தது போன்று ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஜனாதிபதி தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை
ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை முன்வைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்டதன் போது அளித்த வாக்குறுதியை மீறும் வகையிலானது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
