ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு எவ்வாறு அச்சிடப்படும் என்பது குறித்து அச்சகமா அதிபர் கங்காணி லினகே தகவல் வெளியிட்டுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
வாக்குச்சீட்டு அச்சிடும் முறை
இந்த நிலையில் வாக்குச்சீட்டின் உயரம் சுமார் 27 அங்குலமாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரே வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக வாக்காளரின் பெயர்களும் அவர்களின் இலட்சினைகளும் அச்சிடப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஒரே வாக்குச்சீட்டாக அச்சிடுவதா அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கங்காணி லியோனுக்கே கூறியுள்ளார்.
கட்டுப்பனம் செலுத்திய வேட்பாளர்களில் சிலர் சில வேலைகளில் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் எனவும், சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம் எனவும், இதன்படி வேட்பாளர் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
35 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒரே வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை அச்சிடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |