ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பில் இரகசியமான அறிக்கையொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இரகசியமாக பேணுமாறு நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல்களை குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த விசாரணை குறித்து அறிவிக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
