பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே நாட்டின் மிக மோசமான நிலைக்கு காரணம்: இ.சந்திரசேகரன்
தற்போது நாட்டில் மிக மோசமான நிலை தோன்றியுள்ளது, இதற்குக் காரணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (02.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரக்கத்தனமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கொண்டுவரும் நோக்கிலே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.
ஊழல் மோசடிகள்
இந்நிலையில் நாட்டிலுள்ள இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிராகக் குரல்கொடுத்த, மோசடிகளை அம்பலப்படுத்திய மற்றும் ஆளும் தரப்பினருக்கு எதிராகக் குரல்கொடுத்த அனைத்து ஊடகவியளாளர்கள் உட்பட மக்களையும் காவுகொண்ட சட்டமாகவும் காணப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலமானது பத்திரிகையில் எழுதுவதாக இருந்தாலும் சரி முகநூலில் கருத்துக்களைப் பகிர்வதாயினும் சரி அக் கருத்துக்கள் அரசாங்கத்திற்கோ, நாட்டிற்கோ எதிரான கருத்துக்களாக அமையுமாயின் கருத்துத் தெரிவித்தவர்களை வேட்டையாடும் சட்டமூலமாகக் காணப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
