ஆளும் கட்சியின் சிறு கட்சிகளுக்கு அழுத்தம் - வாசுதேவ நாணயக்கார
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எரிபொருளுக்கான விலையை உயர்த்தியமை குறித்து இணங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி எரிபொருள் விலையை உயர்த்தியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகள் என்ற ரீதியில் சில அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் இதன் ஓர் படியாகவே அண்மையில் உதய கம்மன்பிலவிற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஓர் பிரிவு அவரிடமிருந்து அகற்றப்பட்டமை ஓரு விதமான அழுத்தமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சிக்குள் அண்மைக் காலமாக இவ்வாறான முரண்பாடுகள் வெளிப்படையாக தென்படத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam