இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான அழுத்தம் பிரயோகிக்கப்படும் : கஜேந்திரகுமார் ஆதங்கம்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam ) தெரிவித்துள்ளார்.
நேற்று (19) பிற்பகல் முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 5 வருடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆழமாக சிந்தித்து தமிழ் தேசத்தினுடைய இன அழிப்பினுடைய, அடையாளமாக இருக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் மண்ணிலே எங்களுடைய உரிமை பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சத்திய பிரமாணம் எடுக்கின்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்காலுக்கு வந்திருக்கின்றோம்.
கடந்த 15 வருடமாக எங்களுடைய கொள்கைகளையும், மக்களுடைய அபிலாசைகளையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்திருக்கின்றோம்.
நாங்கள் மக்களோடு தோளுக்கு தோள் நின்று அவர்களுடைய அன்றாட பிரச்சினைகளாக இருக்கலாம், அவர்களுக்கு இருக்கக்கூடிய அடக்கு முறையாக இருக்கலாம்.
அனைத்துக்கும் எதிராக அவர்களுடன். போராடி இருக்கின்றோம் அதனையும் தாண்டி இன்று இருக்கக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து எமது இயக்கத்தினுடைய செயற்பாடுகள் இதுவரைக்கும் காணாத அளவிற்கு நாங்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்........
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
