சட்டவிரோத தொழிலை கடற்படையினர் தடுக்க வேண்டும் : முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம்
கடற்படையினர் கடமையை செய்ய தவறினால் எங்கள் கடலை நாங்களே காப்பாற்றிக் கொள்ளுவோம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் வி. அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் (Mullaitivu) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
" கடற்படையினர் ஏன் தங்கள் கடமையை செய்ய தவறுகிறார்கள் என எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அவர்களின் ஆதரவுடன் தான் எங்கள் மாவட்டத்தின் வளம் அழிக்கப்படுகின்றது.
ஆனால், தென்னிலங்கையில் எங்கேயாவது இந்த தொழில் மேற்கொள்ளப்படுகின்றதா? இல்லை.
ஏனென்றால், அங்கு அவர்கள் சட்டத்தில் சரியாக செயற்படுகிறார்கள். ஆனால், அடுத்த மாதத்திற்குள் சட்டவிரோத செயற்பாடுகளை கடற்படையினர் தடுக்காவிட்டால் நாங்களே எங்கள் பகுதி கடலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேலதிக தகவல் : அ. ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |