இலங்கையின் நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம்: மகிந்த ஜயசிங்க
ஐ.எம்.எப் கடனில் இருந்து மிகுதி 9 மில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது யாழ். மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று (21.09.2023) இடம் பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க,
ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று மில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கை பெற்ற கடன்
மிகுதி 9 மில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்றது.
எனவே தற்பொழுது ஐ.எம்.எப் இலங்கைக்கு அதிகளவு கடன் கொடுத்தமை காரணமாக ஐ .எம்.எப் இந்த கடன் சம்மதமாகவும் சீனாவில் இருந்து இலங்கை பெற்ற கடன் தொடர்பாக அறிக்கை கேட்ட பொழுதும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்கவில்லை.
சீனா அரசாங்கமும் இது தொடர்பாக கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. எனவே கடந்த காலத்திலே மத்திய வங்கி ஆளுநர் எமது நாடு கடனை திருப்பி செலுத்தாது என்று வெளிப்படையாக கூறியமையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஆகவே அவர் தனித்தனியாக கடன் பெற்ற நாடுகள் சென்று பேச்சுவார்த்தை செய்திருந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றிருக்கலாம்.
தற்போது ஐ.எம்.ஏப்பிடம் இருந்து கடன் வாங்கியதன் காரணமாக விதிக்கின்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்று இலங்கை அடுத்த கடன்திட்டத்தை இந்தியாவிடம் பெற்றுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
