தமிழ் மக்களை கண்டுகொள்ளாத இலங்கையின் ஜனாதிபதிகள்: சிறீநேசன் ஆதங்கம்
இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் அனைவரும் சிங்கள மக்களுக்கான ஜனாதிபதிகளாகவே நடந்து கொண்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர்களுக்கு மேலதிகமாகப் பிரச்சினை
“தமிழர்களுக்கு மேலதிகமாகப் பிரச்சினைகளை உருவாக்கினார்களேயன்றி இனப்பிரச்சினையைத் தீர்க்கவில்லை. அந்த வகையில்,46 ஆண்டுகள் காலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட 8 ஜனாதிபதிகளும், இடைக்காலத்திற்காக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட இரு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.
தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி ரணில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைகளைக் கூடத் தீர்க்கவில்லை.
இதற்கான மக்களின் அறவழிப் போராட்டத்தினை அவர் மதிக்கவில்லை. இப்போது கூட அவரால் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். சட்டவிரோதமாகக் குடியேறிய அயல் மாவட்டக் குடியேறிகளைக் கூட ஜனாதிபதியால் வெளியேற்ற முடியவில்லை.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு
மேலும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுக்கான திட்டம் ரணில்,சஜித்,அநுர ஆகியோரிடம் இல்லை.
இப்படியிருக்க அதனை நன்கு அறிந்த பின்பும் சில்லறையான சலுகைகள் அல்லது எதிர்காலத் தனிப்பட்ட தேவைகள் அல்லது நட்புக்காகத் தமிழர்கள் எந்த வகையில் வாக்களிக்க முடியும்” என்றார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
