பசில் மற்றும் மகிந்தவுடன் ஜனாதிபதி பேச்சு! - வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய பல மாற்றங்கள் பசில் ராஜபக்சவிற்கான அமைச்சர் பதவி குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய நாட்களாக அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடுகள் தலைதூங்கியுள்ள நிலையில், இதனை ஆளும் கட்சியினர் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிட் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.