திருகோணமலையில் சர்வமத தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள்(Photos)
திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க
பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில் நேற்று (04.01.2024) இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையடுத்து பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் கருத்து தெரிவிக்கையில்,
“எமது மாவட்டத்தில் மூவின மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்கின்றோம். இருந்த பொழுதும் இதனை சீர்குலைப்பதற்கு வேறொரு சக்திகள் இங்கே இயங்குவதனை அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.
தற்போதைய காலப்பகுதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இளைஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீரமைப்பு
இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற யுத்திய செயற்திட்டம் மேலும் வலுப்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளான வைத்தியர் அசங்க குணவன்ச மற்றும் வைத்தியர் யுவி தங்கராசா உள்ளிட்ட மேலும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் நேற்றைய தினம்(04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை மாவட்ட மறை மாவட்ட ஆயர் திருமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
